திருமதி புவனேஸ்வரி கந்தையா

புவனேஸ்வரி கந்தையா

தோற்றம்: 21 ஜூலை 1934 - மறைவு: 12 ஜூன் 2026

யாழ் உரும்பிராய் ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், லட்சுமிவாச ஊரெழு வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கந்தையா அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற மகேஸ்வரி கந்தசாமி மற்றும் இராஜேஸ்வரி சிவசோதி(லண்டன்), பரமேஸ்வரி சிவசோதி(இலங்கை ), சிவசுப்பிரமணியம் கந்தையா (இலங்கை ), புஸ்பராணி மருதையனார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
பரசக்தி ராம்(லண்டன்), ஞானசகுந்தலா ஹரிசந்திரபோஸ்(கனடா ), கந்தசாமி மகேஸ்வரன்(கண்ணன், இலங்கை ), பரமேஸ்வரன் சிவசோதி(நோர்வே ), காலஞ்சென்ற பரமானந்தம் சிவசோதி, பகவதீஸ்வரன் சிவசோதி(லண்டன்), பத்மாசினி சிவசோதி(இலங்கை ),
காலஞ்சென்ற ரங்கேஸ்வரன் சிவசோதி, கலைமகள் தவேந்திரன்(ஜேர்மனி), வசுந்தரா கோபி(இலங்கை ), அனித்தா கஜந்தன்(கத்தார்), மேகலா மருதையனார்(லண்டன்), நிகிலா மருதையனார்(லண்டன்), மிதிலா மருதையனார்(லண்டன்) ஆகியோரின் பெறா மக்களும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் லட்சுமி வாச ஊரெழு கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2026 19:02)