திருமதி. புவனேஸ்வரி (பேபி) காங்கேசு
தோற்றம்: 01 அக்டோபர் 1950 - மறைவு: 26 ஜூலை 2021
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டி கிளானைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட காங்கேசு புவனேஸ்வரி அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற காங்கேசு அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகர், சுகிர்தா, சுவாஸ்கர், சுபாஸ்கர் (பொறியியலாளர்- லண்டன்), சுஜாத்தா (Farm Manager, District Agriculture Training Centre- Jaffna) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மற்றும் காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சிவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவிதா, சுகுமார், சுஜாதா, வேணி (லண்டன்), நவநீதன் (Lecturer- Advanced Technological Institute, Jaffna) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திசானா, ஜீவிகா, சனோஜா, கோபிகன், தனுஜன், தரங்கினி, கிருஷ்ணப்பிரியன், அபிரா, அனிக்கா, சாகித்யன், அக்ஷயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
