திருமதி. புவனேஸ்வரி சந்தயினார்

புவனேஸ்வரி சந்தயினார்

தோற்றம்: 10 ஜூலை 1933 - மறைவு: 22 ஆகஸ்ட் 2024

யாழ். இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தைப் புகுந்த இடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சந்தயினார் அவர்கள் 22-08-2024ம் திகதி வியாழக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை-சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா-கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஞானசேகரன் அவர்களின் பாசமிக தாயாரும்,

லோஜினி (லோஜி) யின் அன்பு மாமியாரும்,

பொற்சிலம்பம்மாள் (இலண்டன்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ஆறுமுகசாமி (கனடா), நடராஜா (அவுஸ்ரேலியா),  வேற்பிள்ளை (இலண்டன்), சிவசிதம்பரேசன் (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம், தேவகி (இலண்டன்), மஹாசரோஜினிதேவி (கனடா), யோகசோதீஸ்வரி (அவுஸ்ரேலியா), சொர்ணாம்பிகை (இலண்டன்), தேன்மொழி (கனடா),  ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவகோசாரியார் (சிவாஜி), வாணி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

நாவரசன் (அயர்லாந்து), கிரிதரன் (இலண்டன்), சிலம்புச்செல்வி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பெரிய தாயாரும்,

கணேஸ்வரன் (இலண்டன்), வசந்தா (இலண்டன்), பிருந்தா (கனடா), பிரசாந்தன் (கனடா), விஜயரூபன் (அவுஸ்ரேலியா), சாந்தரூபன் (அவுஸ்ரேலியா), துவாரகா (இலண்டன்), தீபன் (இலண்டன்), அர்ச்சனா (கலிபோர்னியா) ஆகியோரின் அன்பு பெரியமாமியும்,

சிவா, சகானா, சாயி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2024 05:26)