திருமதி. புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம்
தோற்றம்: 26 மே 1939 - மறைவு: 27 டிசம்பர் 2021
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சிவசுப்பிரமணியம் அவர்கள் 27-12-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, பூரணம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னராஜா (Rajan), சுமதினி, துஸ்யந்தினி (கீதா) ஆகியோரின் தாயாரும்,
ஜெகேஸ்வரன், சுனிதா, ஸ்ரீ கோணேஷ் ஆகியோரின் மாமியாரும்,
பாலசுப்பிரமணியம், மயில்வாகனம், காலஞ்சென்ற விக்னேஸ்வரி, நாகேஸ்வரி (நவம்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீதாஞ்சலி, கோகிலமதி, கார்த்திகேயன் (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
ராஜேந்திரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
வருண், அகிலேஷ், அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-12-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் கிரியை நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
