யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஐக்கிய அரபு அமீரகம் Abu Dhabi, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி தவராசா அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், சச்சிதானந்தம் - பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், தேவசகாயம் - சலோமை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜா, டிலிப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றொகான், யதுர்ஷணா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நாகேஸ்வரி (இலங்கை), கௌரீஸ்வரி (பிரான்ஸ்), சிறிகாந்தா (இலங்கை), கமலேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற புலேந்திரன், நாகேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பிலோமினா, ஜேசுராசா, சிங்கராசா மற்றும் தெரேசம்மா (இலண்டன்), செல்வராணி (இலங்கை), லூர்துமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரொவீனா (கனடா), சமீரா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-02-2025 வெள்ளிக்கிழமை மாலை 5:30 - 9:00 மணி வரையும், 15-02-2025 சனிக்கிழமை காலை 8:30 - 10:30 மணி வரையும் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:30 மணியளவில் St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மதியம் 1:30 மணியளவில் புகழுடல் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org

