திருமதி. புவனேந்திரன் மீனலோஜினி

புவனேந்திரன் மீனலோஜினி

தோற்றம்: 28 ஏப்ரல் 1950 - மறைவு: 19 மார்ச் 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேந்திரன் மீனலோஜினி அவர்கள் 19-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாராயணசாமி - உலகநாயகி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பரம்சோதி - தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற புவனேந்திரன் (குட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன், காலஞ்சென்ற வாணி, கீர்த்திகா, ராகவன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

மாலதி, தவநேசன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அசோக்குமார், கவினேஷ், ஜஷானி, ஹர்சினி, ஆர்யகி, ஆரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சறோஜினி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து, அருட்செல்வம், துரைச்செல்வம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலமுரளி, சிவராம் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-03-2024 வௌ்ளிக்கிழமை ன்று அவரது இல்லத்தில் (நறுவிலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறை) இல் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்று, மாலை 5.00 மணிக்கு ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2024 04:00)