Mrs. Puvanethirarajah Pelomina

(இளைப்பாறிய முகாமைத்துவ உதவியாளர்)

Puvanethirarajah Pelomina

Date of Birth: 25 May 1948 - Deceased: 07 May 2026

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேந்திரராஜா பிலோமினா அவர்கள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை - ஜோசப்பின் தம்பதியினரின் அன்பு மகளும், அருள்ளம்மா - கணபதிபிள்ளை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற பற்றிக், ஜெசியம்மா, காலஞ்சென்ற லுர்து மேரி, திரேசம்மா ஆகியோரின் சகோதரியும்,

ஜெயசுபா, ஜெயசுதேஸ், ஜெயசுகாசினி ஆகியோரின் அன்புமிகு தாயும்,

சத்தியசீலன், பரமானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

றஜினா, ரோமிதா, பிரனேஷ், சோபிதா, டனிஸ்டன், கியூலின் ஆகியோரின் அம்மம்மாவும்,

வலன்சியா, ஜெனிசியா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று காலை 09.30 மணி வரை இல- 323, அன்புவழிபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:00 மணியளவில் அன்புவழிபுரம் சதாசகாய மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் பாலையூற்று றோமன் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/05/2026 00:00)