திரு இ.வே.கனகசபாபதி
(ஓய்வுநிலை பதவி நிலை உத்தியோகத்தர்-வவுனியா)
மறைவு: 05 மார்ச் 2020
விடத்தற்பளையை பிறப்பிடமாகவும்,உசனை வசிப்பிடமாகவும் கொண்ட இ.வே.கனகசபாபதி 05.03.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஓய்வுநிலை கிராம உத்தியோகத்தர்) அவரின்
அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற திலகவதியின் அன்புக் கணவரும்,
கர்ணன்(கண்ணன்-SPHI சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை-சாவகச்சேரி),
கண்ணகி(பவாணி-விரிவுரையாளர்-யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரி),
காருணயன்(கஜன்-கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையாரும்
குணதர்சனா(ஜனா-முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்-மாவட்டச், செயலகம்-யாழ்ப்பாணம்),
தயாசீலன்(கனடா),ஸ்ரீதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிகா(மாணவி-யாழ்.சாவகச்சேரி இந்துக்கல்லூரி),இலக்கியா(மாணவி-சுண்டிக்குளி மகளீர் கல்லூரி)
லக் ஷஜன்(கனடா),யசிகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின்,இறுதிக்கிரியைகள் 06-03-2020ம் திகதி திங்கட்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 11.00 மணியளவில் பூதவுடல்
தகனக்கிரியைக்காக ஈச்சங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
க.கர்ணன்-மகன்
த.கண்ணகி-மகள்
விலாசம்;
காவேரி
உசன்,மிருசுவில்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/03/2020 05:11)
