Mr Ra. Periyasamypillai

(Commercial Hardware Stores)

Ra. Periyasamypillai

Date of Birth: 01 November 1940 - Deceased: 09 February 2024

இந்தியா திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூரைப் பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ரா பெரியசாமிப்பிள்ளை அவர்கள் 09-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ராசநாமிபிள்ளை - தைலம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சப்பாணிப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,

விஷ்வநாத், கபில்நாத் ஆகியோரின் தந்தையாரும்,

அகல்யா, பிரியதர்ஷனி ஆகியோரின் மாமனாரும்,

சிவலிங்கம் (Nippon Metal), செல்வராஜ், காமாட்சி, வள்ளியம்மை ஆகியோரின் சகோதரரும்,

ஜமுனா, சாந்தி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற அ.சதாசிவம், திருமதி.ச. மஹாலக்‌ஷ்மி (சென்னை), பொ. திருநாவுக்கரசு (Meha Steel - Colombo), தி.மணிமேகலை ஆகியோரின் சம்பந்தியும்,

ச.சதாசிவம் (AJ Tectiles), ச.சுந்தரராஜன் (ABA Textiles), ச.தேவராஜ் (Delta Metalics) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

அ.ஜெகநாதன், காலஞ்சென்ற ந.வீரப்பன் ஆகியோரின் சகலையும்,

ஜெ. இந்திரா, வீ. கமலம் ஆகியோரின் மைத்துனரும்,

க.துளசி, க.தவிஷ் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20/35, வீரக்கோன் கார்டன்ஸ், கண்டி இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு, 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக கண்டி மஹியாவ பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2024 05:00)