Mrs. Raam Latchumi

Raam Latchumi

Date of Birth: 25 June 1945 - Deceased: 29 April 2025

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. ராம் லட்சுமி அவர்கள் 29-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராசு - வள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ராம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கிருஷ்ணப்பிள்ளை, சண்முகம், கல்யாணி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரதீப்குமார், பிரியதர்ஷனி, பிரியந்தி ஆகியோரின் அன்பு தாயாரும்,

கணேசனின் அன்பு மாமியாரும்,

அக்‌ஷயா, ஸ்வேதா, ரித்திக்கா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் புஞ்சிபொரளை லங்கா மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2025 04:00)