திருமதி. ராகவன் அன்னம்மா
தோற்றம்: 30 செப்டம்பர் 1940 - மறைவு: 09 பெப்ரவரி 2025
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராகவன் அன்னம்மா அவர்கள் 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ராமன் - காளிக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராகவன் அவர்களின் அருமை மனைவியும்,
காலஞ்சென்ற கலா, சித்திரா (Kids word - கனடா), ராஜினி (கனடா), காலஞ்சென்ற ரமேஸ், ராகுலன் (பிரித்தானியா), கிரிஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராஜேஸ்வரன் (கனடா), குகபாலன்(Kids word - கனடா), மோகனதாஸ் (கனடா), பாசிளா (இலங்கை), மனோஜ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜனகன், ஜேசன், அக்சரன், கீர்த்தி, சஜித், அகத், சகாரா, இமாரன், அப்துல்லா, ரகீம், கரீம், சுமைஜா, அர்ஜன், நேஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அகிலன் அவர்களின் அருமைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6:00 - 9:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-02-2025 புதன்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்ப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
