திரு. இரகுநாதன் சிவபாதசேகரம் (மணியான் மாஸ்டர்)
(ஓய்வுநிலை அதிபர் - யாழ். ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயம், கொக்குவில்)
தோற்றம்: 16 ஜூன் 1947 - மறைவு: 25 ஆகஸ்ட் 2026
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தினைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கொக்குவில் மற்றும் கல்கிசை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இரகுநாதன் சிவபாதசேகரம் அவர்கள் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரகுநாதன் - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பாக்கியரெத்தினம் அவர்களின் பாசமிகு கணவரும்,
மணிகரன், சிவாணி, ஜெனனி, ஷர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாநிதி, சிவனேசன், ஜனகன், சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்ஜய், சஜிந், சிவானுஜன், சுருதி,சுரபி, மிதுன், அஷ்வி ஆகியோரின் பாமசிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவஞானசுந்தரம்பிள்ளை, சிவாநந்தராஜா, நாகேஸ்வரி, தணிகாசலம் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, சிவசுப்பிரமணியம், கற்பகம், தாமோதரம்பிள்ளை மற்றும் நாகரெத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-08-2026 வௌ்ளிக்கிழமை முதல் இல- 21A, புனித சில்வஸ்டர் வீதி, கல்கிசையில் (21A, St.Sylvetser Road, Mount Lavania) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
மணிகரன் (மகன்):- +94 76 984 0294
www.tamilthakaval.org
