திரு. இரகுப்பிள்ளை கைலாயநாதன்
(Retired Deputy Director of Research - Vavuniya)
தோற்றம்: 22 செப்டம்பர் 1951 - மறைவு: 01 ஜூன் 2025
யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரகுப்பிள்ளை கைலாயநாதன் அவர்கள் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரகுப்பிள்ளை - கனகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,
சிவமங்கை அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீஷயன், Dr. லக்ஷனா கண்ணகி, ஹரிஹரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சிவவிரதனியின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி, கனகலக்ஷ்மி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-06-2025 புதன்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
