Mr. Rajadurai Sellappa

(முன்னாள் சிறை அதிகாரி)

Rajadurai Sellappa

Date of Birth: 25 October 1929 - Deceased: 18 July 2026

முல்லைத்தீவு - உணாப்பிலவைப் பிறப்பிடமாகவும், மாமூலையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லப்பா இராசதுரை அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சிதம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செல்வநாயகம், மனோன்மணி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேல்நாயகம், இரகுநாதபிள்ளை, சிவரஞ்சிதம், சிவநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சூரியகுமாரன்(வசந்தன்), நந்தகுமாரன்(வரதன்), வாசுகி(ராதா), வளர்மதி(அனு), வான்மதி(பிறேமா), சாந்திக்குமாரன்(பரதன்), இராஜகுமாரன்(குமரன்), ரகுமாரன்(குபேரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகேஸ்வரி, சத்தியேஸ்வரி, ஆனந்தராசா, ஸ்ரீதரன், லோஜினி, பகீரதி, சனீஷா ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஸ்ரீ ராஜ்குமார், சாரதா, சுமிதா, அமுதா, ரங்கன், யோகன், குட்டி, கவிதா, ஸ்ரீ முருகதாஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மாலினி, திலீபன், ராகினி, நிரஞ்சனி, தயாளினி, சாந்தகுமார், சண்முகப்பிரியா, சிவப்பிரியா, அபிராமி, இராகுலன் ஆகியோரின் அன்பு மாமனும்,

அபிலாஷ், ஆகாஷ், அஜிகாஷ், அனிதா, அஜிதேஷ், அபிஷேகா, அனுராக், சிரோஜன், சிவாங்கி, நிஷாங்கி, ரூபங்கி, ஜதின், கேத்தன், நேத்தன், ராஜேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

ஐரீனா, அனிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-07-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/07/2026 00:00)