Mr. Rajagobal Reddiyar Krishanth

Rajagobal Reddiyar Krishanth

Date of Birth: 23 June 1989 - Deceased: 07 March 2026

கொழும்பினை சேர்ந்த திரு. இராஜகோபால் ரெட்டியார் கிருஷாந்த் அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜகோபால் ரெட்டியார் - முத்துலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த திரு. திருமதி. கிருஷ்ணசாமி ரெட்டியார் தம்பதியினரின் மருமகனும்,

வினுப்பிரியா அவர்களின் அன்புக் கணவரும், 

ஆதவ்வின் பாசமிகு தந்தையும்,

சுதர்ஷினி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி முதல் பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2026 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 - 3.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2026 00:00)