Mrs. Rajakulanayaki Sivapalasingam
Date of Birth: 03 June 1954 - Deceased: 17 November 2025
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா - Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசகுலநாயகி சிவபாலசிங்கம் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் - இராஜேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற கிட்டினர் - தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,
Dr. சிவபாலசிங்கம் (இளைப்பாறிய மாகாணப் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வகுலநாயகி (கனடா), சுகுமார் (இலண்டன்), வசந்தராணி (இலண்டன்), மஞ்சுளா (அச்சுவேலி), உதயகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. அபிரா (அவுஸ்திரேலியா), துவாரகன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலேஸ்வரன் (அவுஸ்திரேலியா), உமாசுதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிஷிக்கா, யஸ்வின், ஆதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் முடிக்கன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
பயித்தோலை,
அச்சுவேலி தெற்கு.
தகவல்:- Dr. சிவபாலசிங்கம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
