திருமதி. இராசலட்சுமி நடராஜாசுந்தரம்

இராசலட்சுமி நடராஜாசுந்தரம்

தோற்றம்: 13 அக்டோபர் 1951 - மறைவு: 12 ஜூன் 2025

யாழ். ஈச்சமோட்டையை பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலட்சுமி நடராஜாசுந்தரம் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜசுந்தரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிறீதரன் (REMAX Ace Realty Inc), ஷாமிளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜனனி, பரணீதரன் ஆகியோரின் ஆசை மாமியாரும்,

பிரவீன், பிரித்திகா, கஜீரா, யுகன், அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மநாதன், இராஜேஸ்வரி மற்றும் சுந்தரலிங்கம், சாந்தலிங்கம், யோகேஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-06-2025 திங்கட்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 17- 06-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 - 9.00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடரந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"எங்கள் அக்காவுக்கு எங்களுடைய ஆழ்ந்த கவலைகளை தெரிவிக்கின்றோம், நேரில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறோம் . "
- Virakathipillai family  (France (Eachchamoddai), 15/06/2025 23:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2025 04:00)