திருமதி. இராஜலக்ஷ்மி சிதம்பரநாதன்

இராஜலக்ஷ்மி சிதம்பரநாதன்

தோற்றம்: 16 ஏப்ரல் 1941 - மறைவு: 24 மே 2023

யாழ் திருநெல்வேலி வடக்கை பிறப்பிடமாகவும்  தெகிவளை வின்சர் அவெனியுவை வசிப்பிடமாகவும் கொண்டவருமான திருமதி இராஜலக்ஷ்மி சிதம்பரநாதன் அவர்கள் நேற்று 24-05 2023ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா நாகபூசணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
 
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அசுவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சிதம்பரநாதன்(சைமன்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
ஸ்ரீ கனகசபை (Physics Teacher, St .Thomas College, Mt. lavinia ), ஸ்ரீகாந்தா (Enginner-Canada), ஆகியோரின் அருமைத் தாயாரும்,
 
லதா (Teacher, Arafath M.M.V), நிரஞ்சனா (Healthcare Manager- Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சியாமளன், கீர்த்தனா, பிரதிக் ஷா (Colombo ), சுபிக் ஷா, சாரங்கி (Canada) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
சிந்தாமணி (Malaysia), அமிர்தலிங்கம் (Jaffna), காஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகலிங்கம், இரத்தினசிங்கம், கனகரத்தினம், சிவமுத்து, கனகலிங்கம், மனோன்மணி, அமிர்தவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹந்த மலர்ச்சாலையில் நாளை 26-05-2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் காலை 11.30 மணி முதல் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில்  தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2023 00:19)