திரு. இராஜலிங்கம் மோகன்
தோற்றம்: 16 ஜூலை 1964 - மறைவு: 30 நவம்பர் 2024
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜலிங்கம் மோகன் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராஜலிங்கம்-பத்மாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கந்தசாமி-பரிபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷி, சஜி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜனி, ரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-12-2024 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
