Mrs. Rajalogini Ambikaibakan

Rajalogini Ambikaibakan

Date of Birth: 17 August 1949 - Deceased: 01 December 2024

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு,  Markham-  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசலோகினி அம்பிகைபாகன் அவர்கள் 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா-நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

அம்பிகைபாகன் (இளைப்பாறிய ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

விமலரூபன், ரூபதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நந்தினி, உதயரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றுக்சியா, யதுக்சியா, விபுசா, ரோகின், றியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மனோன்மணி, நாகேஸ்வரன், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பானுதேவன், ராஜேஸ்வரி, கிருஷ்ணாம்பிகை, இந்திராணி, காலஞ்சென்றவர்களான யோகராணி, தியாகலிங்கம் மற்றும் நடேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 3:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2024 05:00)