திருமதி. இராஜமலர் (மல்லிகா) கதிர்வேற்பிள்ளை

இராஜமலர் (மல்லிகா) கதிர்வேற்பிள்ளை

தோற்றம்: 22 அக்டோபர் 1951 - மறைவு: 06 ஜூலை 2026

 

யாழ். தாவடியைப் பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராஜமலர் கதிர்வேற்பிள்ளை அவர்கள் 06-07-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாவடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் - பூமணி தம்பதியினரின் புதல்வியும். காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், 

துன்னாலை மேற்கைச் சேர்ந்த Dr.கதிர்வேற்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வி. சனாதனா (கயனி) அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேந்திரா, மகேந்திரா மற்றும் சுபாசினி (கனடா), சுபோதினி (கனடா) அவர்களின் அன்பு சகோதரியும்,

மகேஸ்வரி (துன்னாலை மேற்கு), தங்கவேல் (அவுஸ்திரேலியா), ஞானவேல் (இலண்டன்), தனேஸ்வரி (அவுஸ்திரேலியா), சிவனேஸ்வரி (அமெரிக்கா), காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-07-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவுல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் தெகிவளை கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2026 00:00)