திருமதி. இராசநாகேஸ்வரி விஜயசுந்தரம்

இராசநாகேஸ்வரி விஜயசுந்தரம்

தோற்றம்: 30 ஜூன் 1933 - மறைவு: 06 மார்ச் 2025

யாழ்.உடுப்பிட்டி பண்டகையை பிறப்பிடமாகவும், கட்டுவன் சைவமடம், மொன்றியல், ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசநாகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம் (ஆசிரியர் - இருபாலை) - இரத்தினம்மா (உடுப்பிட்டி) தம்பதியினரின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற சீனிவாசகம் (ஆசிரியர்) - செல்லம் தம்பதியினரின்  மருமகளும்,

காலஞ்சென்ற சீனிவாசகம் விஜயசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீபாலசுப்பிரமணியத்தின் அன்புச் சகோதரியும்,

தாட்சாயினியின் மைத்துனியும்,

விஜயசுந்தரம் சோதிலிங்கம் (இருபாலை) அவர்களின் சிற்றன்னையும்,

காலஞ்சென்ற விஜயகுமாரன் (வைரவி - அபுதாபி), விஜயபாலன் (திரு - ஜேர்மனி), விஜயராஜன் (மொன்றியல்), ரகு ஐயா (ரொறொன்ரோ), பத்மநாதன் (சிவா - பிரான்ஸ்), குகேந்திரன் (இந்திரன் - நோர்வே), வேதமூர்த்தி (மூர்த்தி- ரொறொன்ரோ), சேகரன் (பாபு - உடுப்பிட்டி), மனோகரன் (வாசு - உடுப்பிட்டி), திரிபுரசுந்தரி (விஜி - வவுனியா) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-03-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-03-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 11:00 இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/03/2025 05:00)