Mr. Rajanayagam Barathy

(சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர்)

Rajanayagam Barathy

Date of Birth: 06 September 1962 - Deceased: 09 February 2025

யாழ். திருநெல்வேலியைப்  பிறப்பிடமாகவும், கொழும்பையும் திருநெல்வேலியையும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜநாயகம் பாரதி 09-02-2025 அன்று திருநெல்வேலியில் அன்னாரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜநாயகம் (பிரபல கணித ஆசிரியர்) - சிவயோகம் தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை (வடமராட்சி விவாக பதிவாளர்) - தனலக்ஷ்மி தம்பதியினரின்  அன்பு மருமகனும்,

தேவகி அவர்களின் அன்புக்கணவரும்,

பார்த்தீபனின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பரதன்,  சுரபி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

ப.விநோதினி, க.சிவராசா, சுகந்தி, கௌரி,  காலஞ்சென்ற நளினி, பரன், பாமதி, சபேசன், பத்மநிதி, சுபேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக 105/1 பலாலி  வீதியில்  அன்னாரது இல்லத்தில் 13-02-2025 வியாழக்கிழமை வரை வைக்கப்பட்டு, வியாழன் அன்று  காலை 9:00 மணியளவில் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, மதியம் 1:30 மணியளவில்  கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 
தகவல்:- குடும்பத்தினர்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rasanayagam master was my teacher, good friend of my father Ketheeswaranathan who was also a teacher at Parameshwara. I don’t know Bharathi personally but heard about him from the Parameshwara College OBA. I am currently the treasurer on the OBA. May his soul rest in eternal peace."
- K.Mahendran (Sri Lanka, 12/02/2025 22:32)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/02/2025 05:00)