Mr Rajanayagam Ratnasingham

(முன்னாள் ஆசிரியர்(நெடுந்தீவு) மற்றும்சட்டத்தரணியும், பிரசித்த நொத்தாரிசு)

Rajanayagam Ratnasingham

Date of Birth: 06 November 1927 - Deceased: 24 February 2024

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மாரிசன்கூடல் இளவாலையை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராஜநாயகம் இரத்தினசிங்கம் அவர்கள் 24-02-2024ம் திகதி சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜநாயகம் - செல்லம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி - வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஓய்வுபெற்ற ஆசிரியையான திருமதி செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிற்சபேசன் அவர்களின் அன்பு மாமனாரும், 

சாருஜன், குஹனுஜன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
 
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், திருமதி பாக்கியலக்ஷ்மி இராஜேந்திரசிங்கம் (ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை உடுப்பிட்டி மகளிர் பாடசாலை), சுப்பிரமணியம் மற்றும் திருமதி சரஸ்வதிதேவி மகேந்திரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, கதிரவேலு, திருமதி.தெய்வானை இராமலிங்கம், செல்லத்துரை, வீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 02-03-2024 ம் திகதி சனிக்கிழமை மஹிந்த மலர்ச்சாலையில் (No 591 Galle Road Mount Laviniya) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 03-03-2024 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கல்கிசை பொது மயானத்தில்  தகனம் செய்யப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/03/2024 04:10)