Mrs. Rasanayagam Parameshwary
Date of Birth: 18 November 1939 - Deceased: 02 April 2025
யாழ். உடுப்பிட்டி கும்பவாழியைப் பிறப்பிடமாகவும் கட்டுவன், சண்டிலிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிரமாகவும் கொண்ட திருமதி. இராசநாயகம் பரமேஸ்வரி அவர்கள் 02-04-2025 புதன்கிழமை அன்று சண்டிலிப்பாயில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம் (துர்க்கா மரக்காலை - சண்டிலிப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராசலிங்கத்தின் பாசமிகு தாயாரும்,
சாந்தரூபியின் பாசமிகு மாமியாரும்,
வைஷ்ணவி, ஸ்ரீரமணன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
ஆதிராவின் அன்பு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, தங்கவேலாயுதம், சிவபாதசுந்தரம் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற நாகேந்திரம், அரியநாயகம் (Retd, M.L.T ஆதுரா Clinic , மட்டக்களப்பு), காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
சசி மில் லேன், சண்டிலிப்பாய்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
