Mrs Rajarajeshwari Thangaraja
Deceased: 18 January 2018
புங்குடுதீவு, 12 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் முதலாம் வட்டாரத்தைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராஜராஜேஸ்வரி தங்கராசா 18.01.2018 வியாழக் கிழமை காலமானார்.
அன்னார் புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் – நாகாத்தைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி – நாகமுத்து தம்பதியரின் இளைய மருமகளும் அனசூயா, கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும் தசிதரன் (பிரான்ஸ்), சசிக்குமார் (தனியார் மினிபஸ் சாரதி 776 புங்குடுதீவு) ஆகியோரின் பாசமிகு மாமியும் யனுஷன், பவிஷனன். ராகவி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (21.01.2018) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மணக் காடு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
www.tamilthakaval.org
