திரு. இராஜரத்தினம் சண்முகலிங்கம்
(ஒய்வுபெற்ற தபாலதிபர், வெள்ளவத்தை)
தோற்றம்: 28 பெப்ரவரி 1940 - மறைவு: 13 ஆகஸ்ட் 2026
யாழ். செட்டியார் மடம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், மூளாய் வீதி வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராஜரத்தினம் சண்முகலிங்கம் அவர்கள் 13-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரத்தினம் - சிவலோகநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், வட்டுக்கோட்டை முளாய் வீதியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை - அமுதப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் (ஓய்வுபெற்ற தாதிய உத்தியோகத்தர்) அன்புக் கணவரும்,
தர்மினி (அவுஸ்திரேலியா), அபர்ணா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சனன் (அவுஸ்திரேலியா), செந்தூர்செல்வன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகரன், அருசன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தியாகலிங்கம், சாரதாம்பாள், கமலாம்பாள், மற்றும் கணேசலிங்கம் (கனடா), மகேசலிங்கம் (பிரான்ஸ்), ஜெகதாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருவருட்செல்வன், சிவராஜா, உமாக்காந்தன் மற்றும் நளாயினி (கனடா), சாந்தகுமாரி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான செல்வலட்சுமி, பாக்கியலட்சுமி மற்றும் செல்வராஜா, மகாலிங்கம், பிறேமாவதி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், சிவராஜதேவா மற்றும் திலகவதி, ஜெகதீஸ்வரி, கனகநாயகம் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மூளாய் விதி வட்டுக்கோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
