Mrs. Rajasingam Manimegaladevi
Date of Birth: 27 October 1944 - Deceased: 05 January 2025
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் திருமதி. இராஜசிங்கம் மணிமேகலாதேவி அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (மாசிலாமணி மாஸ்டர்) - கமலாட்சி அம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
வன்னியசிங்கம் - தங்கராசம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற இராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மணிவாசகர், ஞானந்தர், சோமஸ்கந்தர், ஜெயமணிதேவி மற்றும் சந்திரபாலன், பரமானந்தர் ஆகியோரின் சகோதரியும்,
ராஜ் ரபிந்திரனாத்தின் (Ruby Trading Lanka (Pvt) Ltd) பாசமிகு தாயாரும்,
மதனரூபியின் மாமியாரும்,
ஷனாவ், லிர்த்தின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
