திரு. இராஜசுந்தரம் சுப்பிரமணியம்
மறைவு: 22 அக்டோபர் 2025
கனடியத் தமிழ் சட்டத்தரணியும் மனிதநேயம்மிக்கவருமான சட்டத்தரணி திருமதி. இராஜபாலினி சசிதரன் அவர்களது அன்புத் தந்தையாரும், கனடியத் தமிழ் சட்டத்தரணி திரு. சசிதரன் விவேகானந்தன் அவர்களின் மாமனாருமாகிய திரு. இராஜசுந்தரம் சுப்பிரமணியம், 22 அக்டோபர் 2025 அன்று இலங்கை, கொழும்பில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்ளுகின்றோம்.
திரு. இராஜசுந்தரம் சுப்பிரமணியம் அவர்களின் திருவுடல் அக்டோபர் 26, 2025 ஞாயிற்றுக்கிழமை, காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை, மவுண்ட் லாவினியாவில் உள்ள மஹிந்த இறுதி சடங்கு மண்டபத்தில் நடைபெற்று இறுதிக்கிரியைகள் மதியம் 1:00 மணிக்கு ஆரம்பமாகும், அதனைத் தொடர்ந்து 3:00 மணிக்கு மவுண்ட் லாவினியா இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை அறியத் தருகின்றோம்.
அன்புத் தந்தையாரை - மாமனாரை இழந்து தவிக்கும் சசிதரன் - இராஜபாலினி மற்றும் அவர்களது உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
