திரு. இராஜவரோதயம் சம்பந்தன்
Mr. Rajavarothayam Sampathan
(திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்)
(Member of Parliament for Trincomalee)
தோற்றம்: 05 பெப்ரவரி 1933 -
மறைவு: 30 ஜூன் 2024
Date of Birth: 05 February 1933 -
Deceased: 30 June 2024
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவருபவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91வது கொழும்பில் சுகயீனம் காரணமாக காலமானார்.
அன்னார் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் ஆவார்.
பாராளுமன்றத்தின் வயது மூத்த உறுப்பினர் ஆவார்.
அவரை எல்லா வெளிநாட்டு தலைவர்கள் அவரது இல்லத்தில் வந்து சந்தித்து போவார்கள்.
தனது காலத்தில் அரசியல் தீர்வை பெற்று விடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவர் ஆனால் அது கை கூடவில்லை என்பது மிக கவலையாகும்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உயர்திரு. இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்கள் தனது 91 ஆவது வயதில் இன்று (30.06.2024) இரவு 9 மணியளவில் காலமானார். எனது உறவினர் திரு. றோய் அவர்கள் மூலம் அறிந்த போதும், திருக்கோணேஸ்வரத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி திரு. திவாகரன் அவர்கள் செய்தி உண்மையா என்று கேட்ட போதும், குழம்பிய மனநிலையோடு...அவரது பாதுகாவலர் திரு. ஸ்ரீரத்தினம் அவர்களுடன் பேசி அதனை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
www.tamilthakaval.org
