திருமதி. ராஜேந்திரன் சரஸ்வதிதேவி (சின்னபேபி)

ராஜேந்திரன் சரஸ்வதிதேவி (சின்னபேபி)

தோற்றம்: 05 ஆகஸ்ட் 1945 - மறைவு: 24 ஜூன் 2025

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை (கிழக்கூர்) பிறப்பிடமாகவும், யாழ். றக்கா வீதி, கொழும்பு - உம்பிச்சி பிளேஸ், இந்தியா மற்றும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. இராஜேந்திரன் சரஸ்வதிதேவி அவர்கள் 24-06-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - கனகம்மா தம்பதியினரின் ஆசை மகளும்,

காலஞ்சென்றவர்களான முத்துவேலு - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராஜேந்திரன் (உரிமையாளர்- VSSM Stores, கல்யாணி Stores) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திருஞானம், பாலசிங்கம் மற்றும் பத்மாசனிதேவி (பெரிய பேபி), பொன் சுந்தரலிங்கம், பொன் இளங்கோவன், காலஞ்சென்ற பொன் சுபாஸ்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோககல்யாணி, நித்யகல்யாணி, ரஞ்சனி, சிவநேசன், உமாநந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடேசலிங்கம் (செல்வன்), தயானந்தன், டிலாஷ், குகதர்ஷினி ஆகியோரின் அன்பு மாமியும்,

ரஜீவ், கபிலன், தரண்யா, டிரா, டிரன்யா, ரியாலஷ்மி, அவிக்கா, அத்விக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, மகேஸ்வரி, கோபாலபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், ரட்ணசபாபதி, மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் பாசமிகு சகலியும்,

காலஞ்சென்றவர்களான வர்ணமணி, மகேஸ்வரி, கனகரட்ணம் மற்றும் ரஞ்சனா, கோசலை, சந்திரா-சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2025 04:00)