கலாபூஷணம். ராஜேஸ்வரி ஜெகானந்தகுரு

(இளைப்பாறிய அதிபர் - நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயம் (MA))

ராஜேஸ்வரி ஜெகானந்தகுரு

தோற்றம்: 10 மார்ச் 1934 - மறைவு: 29 டிசம்பர் 2025

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் மாரியம்மன் வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், தற்போது தெகிவளையில் வசித்தவருமான திருமதி. இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு அவர்கள் 29-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தபிள்ளை - தெய்வானை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற செல்லையா - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெகானந்தகுரு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற வைரவசுந்தரம், மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராதை (வீணாநாதயை இயக்குனர்), முரளிதரன் (கண்ணன் - Millerts (Pvt) Ltd ஓய்நிலை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

குமாரதாஸ் (ஓய்வுநிலை Telecom பொறியியலாளர்), கலைமகள் (ஆசிரியை - பிலி. நுகேகொடை த.ம.வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரபு, ஜஸ்மின், பைரவி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-12-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2025 00:00)