Mrs Rajeshwary Manickavasagar
Date of Birth: 26 July 1939 - Deceased: 23 January 2024
யாழ். புலோலி கிழக்கு ஓராம் கட்டையை பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 23-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு. அருணாசலம் மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,
ருக்மணி, செல்வராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரயன், வரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீபன், டேவிட் ஆகியோரின் அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, யோகாம்பிகை, மகேஸ்வரி, கனகாம்பிகை, குகநாதன், சடாச்சரநாதன், செந்தில்நாதன், பாலாம்பிகை ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம், செல்வராஜா, வேலாயுதன், வேலுப்பிள்ளை, அருந்ததி, பாலாம்பிகை மற்றும் ராஜசிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 25-01-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பகல் 1.30 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
