Mrs. Rajeswary Poopalasingam
Deceased: 12 February 2025
யாழ். திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், இராஜ வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜேஸ்வரி பூபாலசிங்கம் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியக்குட்டி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற JP பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், இராஜேந்திரன் மற்றும் மங்களேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணம், சறோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகேந்திரா (கொழும்பு), காலஞ்சென்ற ஸ்ரீகுமார், சக்திகுமார் (பிரான்ஸ்), ஜெயந்தினி (இலண்டன்), ஜெயந்திகுமார் (கனடா), சுகிர்தனி (இலண்டன்), சுரேஸ்குமார் (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடேசன் (இலண்டன்), யசோதா (கொழும்பு), தக்ஷினி (கொழும்பு), சகுந்தலா (பிரான்ஸ்), தசரதகுமார் (இலண்டன்), இந்துமதி (கனடா), நளாயினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் திருநெல்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
