திருமதி. இராஜேஸ்வரி சவுந்தரராஜா

(ஓய்வுநிலை அதிபர்)

இராஜேஸ்வரி சவுந்தரராஜா

தோற்றம்: 04 பெப்ரவரி 1953 - மறைவு: 31 ஆகஸ்ட் 2026

திருகோணமலை - ஈச்சிலம்பற்றைப் பிறப்பிடமாகவும், முத்துச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராஜேஸ்வரி சவுந்தரராஜா அவர்கள் 31-08-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், தியாகராஜா - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சவுந்தரராஜா (முன்னாள் விவாகப் பிறப்பு, இறப்பு பதிவாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கோணேஸ்வரன், சபேஸ்வரன், ஜீவா, ஸ்ரீ ஜனனி, பிரதீஸ்வரன், டிலக்சனா, அரசம்மா ஆகியோரின் அன்புத்தாயாரும்,

தனராபன், லோஜன், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தில்லைநாயகி, தேவராணி, சந்திராதேவி, காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, ஜெயசீலன், சர்வானந்தம், சண்முகதாஸ் ஆகியோரின் சகோதரியும்,

பேரின்பராஜா, பசுபதிப்பிள்ளை, சிவானந்தராஜா, கிருஸ்ணவேணி, கமலவேணி, புஸ்பவேணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோமிசா, சஸ்மிதா, ஹர்சனா, பிரதீப், ரபிசன், கௌசினி, கிதுஸ்கரன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று  அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் திருவுடல் முத்துச்சேனை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உற வினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2026 00:00)