Mrs. Rajeswary Nandakumar

(Retired Principal)

Rajeswary Nandakumar

Deceased: 14 May 2023

யாழ் பருத்தித்துறை வியாபாரிமூலையை பிறப்பிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நந்தகுமார் (முன்னாள் அதிபர் பரு/ மெதடிஸ் பெண்கள் உயர்தர பாடசாலை, க/ கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம், க/ விவேகானந்த தமிழ் மகா வித்தியாலயம்) அவர்கள் இன்று 2023.05.14 ம் திகதி ஞாயிற்றுகிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செகநாதபிள்ளை, இரத்தினம் அவர்களின் கனிஷ்ட புதல்வியும்,
 
பேராசிரியர் வைத்திலிங்கம் நந்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
 
அமரர் சரஸ்வதி கணபதிப்பிள்ளை, அமரர் இராஜலக்ஷ்மி பத்மநாதன், செகநாதபிள்ளை உலகநாதபிள்ளை அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
அமரர் கதிரித்தம்பி வைத்திலிங்கம், அமரர் சரஸ்வதி வைத்திலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
தனஞ்ஜெயன் (வளவாளர் (ICT) வலயக்கல்வி பணிமனை- கம்பளை), Dr. சஞ்ஜீவன் (ஆஸ்திரேலியா), ஜெயதர்ஷன் (தர நிர்ணய கட்டுப்பாட்டாளர், கனடா), Dr. ஜனனி (கொத்மலை பிரதேச வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
பிரபாலினி (தாதிய உத்தியோகத்தர் கண்டி தேசிய வைத்தியசாலை), Dr. சுஜிதா (ஆஸ்திரேலியா), அஜந்தா (திருவள்ளுவர் தமிழ் பாடசாலை அதிபர் கனடா), Dr. சஞ்சீவன் ( நுவரெலியா பொது வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
அருணி, திவ்யன், ஜெயந்தன், தருண் (ஆஸ்திரேலியா), டிலான் (ஆஸ்திரேலியா), சச்சின் (ஆஸ்திரேலியா) தரணியன் (கனடா), காயத்ரி (கனடா), ஹேரிஸ், தேஜஸ் ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார். 
 
அன்னாரின் பூதவுடல் புதன்கிழமை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் ஈமக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 3 மணியளவில் மஹியாவ மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
 
இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். 
 
தகவல் :- பேராசிரியர் வை. நந்தகுமார் குடும்பம் 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2023 23:44)