Mrs. Rajeswary Rajendran (Kanna)
Date of Birth: 14 September 1959 - Deceased: 31 January 2026
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்- ராட்டர்டாம் - நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராசேஸ்வரி இராசேந்திரன் அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (முன்னாள் பேருந்து நடத்துனர், இலங்கை போக்குவரத்து சபை) - பொன்னம்மா (பூவதியா) தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் (முன்னாள் தபால் துறை ஊழியர்) - சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
புங்குடுதீவு பூவதியா புனித இல்லம், புங்குடுதீவு பூவதியா புனித பூமி, சீரடி சாயி பாபா உரிமையாளர் இராசேந்திரன் அவர்களின் அன்புத் துணைவியும்,
நடேசராஜா, தங்கராஜா ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
ரஜிதரன், ரவீந்தர், ரமதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரீத்தா, ஸ்ரெவெலின், ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உலகநாயகி, கிருபானந்தன், செல்வானந்தன், கௌரியாம்பாள், மற்றும் கோசலதேவி, பங்கசவதனா, லோகேஸ்வரியின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஐெயலெட்சுமி, ஆனந்தராசா, மற்றும் புஸ்பரானி, சௌந்திரராஜாவின் உடன் பிறவா சகோதரியும்,
டஸ்வின், பிரிட்வின், ஜெயிவின், சில்வானோ, டிஸானோ ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 0
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
