திருமதி. ராஜேஸ்வரி சுப்ரமணியம்
தோற்றம்: 15 மார்ச் 1980 - மறைவு: 22 மே 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராஜேஸ்வரி சுப்ரமணியம் அவர்கள் 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற V.பாலசுப்ரமணியம் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராஜன் - பாப்பாத்தியம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
டினுக்கிரகா. ஹரி விகாஷ் ஆகியோரின் பாசமிகு தாயும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் (சுகந்தன்) அவர்களின் பாசமிகு தங்கையும்,
திருமதி சுகந்தன் நிவாஷினி, திரு.திருமதி மீனாட்சி சுந்தரம், திரு. திருமதி நரசிம்மன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்ராந்த், ஷேஷாந்த் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் திருவுல் 23-05-2026 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- சுப்ரமணியம் (கணவர் - கொழும்பு, செட்டியார் தெரு, ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி திருக்கோவில் - முகாமையாளர்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
