Mrs. Rajeswary Thirunavukarasu
Date of Birth: 18 February 1937 - Deceased: 03 May 2024
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி அம்மா திருநாவுக்கரசு அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - செல்லமுத்து ஆகியோரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா - தங்கம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
திரு. திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,
விக்கினேஸ்வரன், ரோகினி, பாமினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சோபனா, கிருஷ்ணகுமார், தர்மதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், இரத்தினம்மா, மாணிக்கவாசகர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபிலாஷன், ஆரூரன், ஆதித்தியா, அதிசயா, அனுஷன், திருமதி ஆஞ்ஜானா றிசோஜன், அதிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆக்சனா, அரோன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 55 Run Gince, Montreal QC,H4N 137 என்னும் முகவரியில் உள்ள மலர்ச்சாலையில் 09-05-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2024 05:27)
