திருமதி. ராஜி சிறிபாலன்
தோற்றம்: 01 ஜனவரி 1977 - மறைவு: 29 ஜனவரி 2025
யாழ். இணுவில் கிழக்கு இளந்தாரி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஸ்ரீபாலன் ராஜி அவர்கள் 29-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை - இராசமணி தம்பதியினர், சீவரத்தினம் - பத்மாசனதேவி தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,
நாகராஜா - ரதிதேவி தம்பதியினரின் அன்பு மகளும், நடராஜா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிறிபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
யாதவன், புவனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அரவிந்தன், ரஜீவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபாசினி, ரவிச்சந்திரராஜன் ஆகியோரின் மைத்துனியும்,
வசந்தி, தியாகராஜா, ஈஸ்வரபாலன், ராசாத்தி, கணேசபாலன், சுபாசினி, சிசுபாலன், யோகநாதன், அனுசா ஆகியோரின் மைத்துனியும்,
வியோமியின் மாமியும்,
அருணன், வருணன், தருணன் ஆகியோரின் அத்தையும்,
வர்சினியின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-02-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
