திருமதி. ராஜுபிள்ளை மாரியாய்

ராஜுபிள்ளை மாரியாய்

மறைவு: 20 மார்ச் 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் தும்பலம் கிராமம். ராஜூபிள்ளை மாரியாய் அவர்கள் 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாமக்கல் மாவட்டம், ஆலம்பட்டி கிராமம் கருப்பையாபிள்ளை - சிய்யாலம்மை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான தும்பலம் அரப்பலியாபிள்ளை - தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்

காலஞ்சென்ற ராஜூபிள்ளை அவர்களின் மனைவியும், 

ஜோதிராஜன் (திருச்சி), காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன், தனபாலசுந்தரம் (பாலா- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி (திருச்சி) இன் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானை, கருப்பையாபிள்ளை, சரோஜா, காயாம்பு ஆகியோரின் சகோதரியும்,

பெரியண்ணன்பிள்ளை (மடுல்சீமை) - காலஞ்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும்,

இந்துஜா (சென்னை), காலஞ்சென்ற சரவணன், கார்த்திஷன், அபிராமி, ஹர்திஷினி ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/03/2026 00:00)