திரு. இராமலிங்கம் சத்தியேந்திரா
(ஓய்வு பெற்ற காசாளர் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம், சமாதான நீதிவான், நல்லூர் பிரதேச செயலகம், இணக்கசபை உறுப்பினர்)
தோற்றம்: 10 நவம்பர் 1961 - மறைவு: 18 ஜூன் 2026
யாழ். அரியாலை மேற்கு இல- 82/1, ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமலிங்கம் சத்தியேந்திரா அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - தேவாமிர்தம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுமதி (சித்த மருத்துவப்பகுதி, யாழ்.மாநகரசபை) அவர்களின் அன்புக் கணவரும்,
குலேந்திரா (உள்ளக பயிற்சி மருத்துவர் - சித்த மருத்துவ போதனா வைத்தியசாலை, கைதடி), தபேந்திரா (இறுதி வருட மாணவன் பொறியியல் பீடம், மொறட்டுவை பல்கலைக்கழகம்), அமிர்தஹரணி (மாணவி - யாழ். நல்லூர் சென். பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராசா மாலினிதேவி, ரோகிணிதேவி, இரவீந்திரன், காலஞ்சென்ற மகேந்திரன், திலகேந்திரன், குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கிருதரன், நவரத்தினம் தர்சினி (ஹொலண்ட்), தர்மகுலசிங்கம், புளோரா ரேணுகா, ரஞ்சினி, ரவீந்திராதேவி, மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நவரத்தினம், நிம்மதி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-06-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
