Mr. Ramachandran Mathiyugan
Date of Birth: 15 December 1992 - Deceased: 02 April 2026
முல்லைத்தீவு - முதலாம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளையை வசிப்பிட மாகவும் கொண்ட ராமச்சந்திரன் மதியுகன் அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார், ராமச்சந்திரன் - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், நல்லையா - தவமணி தம்பதியினர், இராசதுரை - செல்லம்மா தம்பதியினரின் பாசமிக்கு பேரனும்,
யசாந்தா, நிரோயஸ், ஜெனனி (இலண்டன்), யதிஷன் (குட்டி) ஆகியோரின் பாசமிக்கு சகோதரனும்,
ஆனந்தராசா (கண்ணன்-இலண்டன்), அனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்வித் (கலைமகள் வித்தியாலயம்), ஆத்விக் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஸ்விந்தின் அன்பு பெரியதந்தையும்,
சிவானந்தராசா, தங்கத்துரை, சரஸ்வதி, அன்னலட்சுமி, காலஞ்சன்ற ஈஸ்வரி (மாம்பளம்), மல்லிகா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற சோதிப்பிள்ளை, பாக்கியம், காலஞ்சென்ற மகேஸ்வரி, ராசேஸ்வரி, துரைராசா, காலஞ்சென்ற விக்னேஸ்வரன், ஶ்ரீஸ்கந்தராசா (பெத்தப்பா), ஜெயமோகன் (தம்பியன்), பெருமைனர் (பவுணர்), பாச்சந்திரன் (பாலன்), காலைஞ்சென்ற சந்திரமோகன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-04-2026 வௌ்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் வற்றாப்பளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் முள்ளியவளை நாவற்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
