Mr. Ramachandran Sriram

Ramachandran Sriram

Date of Birth: 14 April 1953 - Deceased: 01 March 2025

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, ஓடை லேனைப் பிறப்பிடமாகவும், இல - 33, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், தற்போது இல - 25 / 8, முதலி கோயில் வீதி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ராமச்சந்திரன் ஸ்ரீராம் அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமச்சந்திரன் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன் - இராமநாயகி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

பத்மதர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கலைவாணியின் அன்புச் சகோதரனும்,

இராஜரெட்டினத்தின் அன்பு மைத்துனரும்,

கிருஷானின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் புகழுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- மனைவி.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"To, Wife Pathmatharshini and family, please accept our heartfelt condolences. Sriram was my bench mate at Kulankarai school. Fond memories of a childhood friend."
- Thanigasalam Arumuganathan (USA, 02/03/2025 23:24)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2025 05:00)