திரு. ராமையா ஜெயப்பிரகாஷ்

ராமையா ஜெயப்பிரகாஷ்

தோற்றம்: 25 டிசம்பர் 1954 - மறைவு: 18 ஜூன் 2026

நாவலப்பிட்டி தியேட்டர் வீதியைப் பிறப்பிடமாகவும், இல- 1/4 A1, பாம் ரோட், மட்டக்குளி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ராமையா ஜெயப்பிரகாஷ் அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமையா தேவர் - கமலாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகையா தேவர் - கதிர்மலர் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புஸ்பதேவி அவர்களின் அன்பு கணவரும்,

திவ்யா, தனுஷியா, பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜய் கிஷானின் அன்பு மாமனாரும்,

ராஜசேகர், காந்திமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

வியானின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-06-2026 வெள்ளிக்கிழமை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-06-2026 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2026 00:00)