திரு. இராமலிங்கம் கந்தசாமி (தேவன்)

(விஷ்ணு கடை, ஶ்ரீரங்கன் கம்பனி, வின் லொட்ஜ், கோகுலன் & திருமால் லொறி - உரிமையாளர்)

இராமலிங்கம் கந்தசாமி (தேவன்)

தோற்றம்: 14 மார்ச் 1954 - மறைவு: 18 நவம்பர் 2025

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கொழும்பு மற்றும் கனடாவில் வாழ்ந்தவருமான திரு. இராமலிங்கம் கந்தசாமி அவர்கள் 18-11-2025 புதன் கிழமை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  திரு. திருமதி. இராமலிங்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சின்னராசா மற்றும் பூமணி தம்பதியினரின்  அன்பு மருமகனும்,

இராஜசுசி அவர்களின் அன்புக் கணவரும்,

காவேரி, பானு, தேவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜேந்திரன், நிருஜன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும். 

காலஞ்சென்றவர்களான செல்வராணி, நடராஜா (வாமு) மற்றும் ஜெயா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்ற அருளம்பலம், சிவநேசன், நாகேஸ்வரி (கிளி), ராஜகாந்தன், ராஜஶ்ரீ (பப்பி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நேருஜன், மேனுஷன், தேனுஷன் ஆகியோரின் மாமாவும்,

சபீனா, சஞ்சீவன், கந்த், மீரா, கோபி, சந்துரு, நந்து, கிருஸ்ணா ஆகியோரின் பெரியப்பாவும்,

இவர் ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் (கனடா) வின் ஆலோசனை குழு உறுப்பினரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகை விபரம். 

பார்வையிடும் நேரம்:-

சனிக்கிழமை - 22-11-2025   [6.30 - 10.00]

இறுதிக்கிரிகை:-

ஞாயிற்றுக்கிழமை 23-11-2025  [காலை 08.00 - 11.00]

AJAX Crematorium & visitation centre 

384 Finley avenue, Ajax ON L1S 2E3

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2025 17:45)