திருமதி. ராமன் கவுண்டர் லெச்சுமி

ராமன் கவுண்டர் லெச்சுமி

தோற்றம்: 09 டிசம்பர் 1933 - மறைவு: 28 நவம்பர் 2025

தலவாக்கலை லிந்துலை, ஹென்போல்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - மோதரையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ராமன் கவுண்டர் லெச்சுமி அவர்கள் 28-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமசாமி கவுண்டர் - அம்மாள் அம்மா தம்பதியினரின் மகளும், 

காலஞ்சென்ற ராமன் கவுண்டர் (காராள ராமன்) அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பழனியாண்டி கவுண்டர் (இந்தியா), பெருமாயி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான காளியண்ணன் கவுண்டர், மாரப்பன் கவுண்டர் ஆகியோரின் அண்ணியும்,

பெருமாள், செல்லம்மாள், ராஜகோபால், ராஜேந்திரன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

தனலெட்சுமி, ராமச்சந்திரன், ராஜேஸ்வரி ஆகியோரின் மாமியாரும்,

சஞ்ஜீத், திலக்‌ஷி, கவிஷினி, கவிஷேக், மதுக்‌ஷி ஆகியோரின் பாசமிகு அப்பாயியும்,

ரமேஷ்ராஜா, கோகிலா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,

சர்வேஷ், ரித்திகா, லஹர்ஷா, ட்ரிஷ்னு, ட்ரிட்டி, ரிஷேத், ஆராத்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் மாதம்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/12/2025 00:00)