திரு இராமநாதன் கிருஷ்ணன்
(MLTயாழ் போதனா வைத்தியசாலை)
தோற்றம்: 22 நவம்பர் 1938 - மறைவு: 28 பெப்ரவரி 2024
யாழ். அச்சுவேலி பயித்தோலைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டவரும், யாழ் போதனா வைத்தியசாலை ஓய்வுபெற்ற ஆய்வுகூட தொழில் நுட்ப உத்தியோகத்தரும், யாழ் மாவட்ட சிற்றூர்தி இணையங்களின் தலைவர், Lion கழக உறுப்பினர், அச்சுவேலி மத்திய சனசமூக நிலைய தலைவர் மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை நலன்புரி சங்க நிர்வாக உறுப்பினருமான திரு இராமநாதன் கிருஷ்ணன் அவர்கள் நேற்று 28-02-2024ம் திகதி புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதன் - அம்மாக்குட்டி அவர்களின் அருமை மகனும்,
காலஞ்சென்ற செல்லப்பா செல்வராசு அவர்களின் பாசமிகு மருமகனும்,
அருந்தவராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
வாசினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சின்னத்தம்பி, சின்னராசு, பாலசிங்கம், சுப்பிரமணியம், நடராஜா, சிவலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 29-02-2024ம் திகதி விஆழக்கிழமை மதியம் 12:00 மணியளவில் துவாரகை அச்சுவேலி தெற்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முழங்கன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
"துவாரகை"
அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/02/2024 08:28)
