திரு. இராமநாதன் குமாரசாமி

(ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர் - நில அளவைத் திணைக்களம்)

இராமநாதன் குமாரசாமி

மறைவு: 13 ஜூலை 2025

யாழ். நெடுந்தீவு மேற்கு 2ம் வட்டரத்தைப் பிறப்பிடமாகவும், இல - 94/7, உரும்பிராய் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமநாதன் குமாரசாமி அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, பெரியநாயகி, பசுபதி, செல்லம்மா, தையலம்மா, சுந்தரம்பிள்ளை மற்றும் தம்பையா, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மரத்தினம், பரமேஸ்வரி, இரவீந்திரகுமார், தயாளினி, வனிதா, திரிநயனி, பத்தஅரிகரன் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற குருபரன், செல்வகுமார் (ஆசிரிய ஆலோசகர் - தீவக கல்வி வலயம்), குமுதினி (ஜேர்மனி), செல்வந்தி (ஜேர்மனி), பாமினி (சமுர்த்தி வங்கி முகாமையாளர் - நெடுந்தீவு), ரேணுகா (ஆசிரியை - யாழ். கொடிகாமம் தமிழ்க் கலவன் வித்தியாலயம்), திருக்குமார் (ஊழியர் - கால்நடை வைத்திய நிலையம், நெடுந்தீவு), தர்மகுமார் (அதிபர் - யாழ். கோகிலாகண்டி மகாலக்சுமி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

கஸ்தூரி (ஆசிரியை - யாழ். நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்), பரமேஸ்வரன் (ஜேர்மனி), சந்திரகுமார் (ஜேர்மனி), கோணேஸ்வரன், சுதாகர் (பாடசாலை பணியாளர் - யாழ். கச்சாய் மகா வித்தியாலயம்), சுபதர்சினி, பாத்திமா சுமையா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜீவன், விதுசிகா, கிரிசாந், சோபியா, அனோஜ், ஆரபி, மிதுன், மிர்சா, ஹர்சன், தாரகா, விபூஜா, நிவர்த்திகா, கிருசன், யதிகா, ஹம்சிகா, லதீஸ், லிபிசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2025 திங்கட்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பன் இந்து மயானத்தில் தகன் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/07/2025 04:00)