திரு. இராமநாதன் மகேஸ்வரன்

(முன்னாள் விவசாய திணைக்கள பரிசோதகர், Anglo Asian மாகாண விற்பனை முகாமையாளர்)

இராமநாதன் மகேஸ்வரன்

தோற்றம்: 31 அக்டோபர் 1953 - மறைவு: 22 ஜூன் 2025

யாழ். மாதகல் வடக்கை பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மற்றும் கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராமநாதன் மகேஸ்வரன் அவர்கள் 22-06-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் (ஓய்வு பெற்ற தபாலதிபர்) - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,

சீதாலட்சுமி இராமநாதனின் பெறாமகனும்,

காலஞ்சென்ற தங்கராஜா (வைத்தியர்) - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

பஞ்சநிதி அவர்களின் அன்பு கணவரும்,

விருஷன், தர்ஷனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், லாவன்யா, ருசானி ஆகியோரின் அன்பு மாமனாரும் 

ஆதித்தியாவின் அருமைப் பேரனும்,

சோதிஸ்வரன், செல்வரானி, தவேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகெளரீசன், பவானி, சந்திரகுமார், ஜெயந்தி, சாந்தகுமாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-06-2025 புதன்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், மறுநாள் 26-06-2025 வியாழக்கிழமை காலை 9.30-11.30 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 wooabine Ave, Markham ON L3R SG1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematiorium Inc (2 Stalwart industrial Dr Gormley,ON LOH 1GO) தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2025 04:00)